சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால்தான் அமித்ஷா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என பரவியது வதந்தி என, அவருடைய மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக கூறி வரும் ரஜினி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போதும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி தற்போது அரசியல் பிரவேசம் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக ரஜினியின் கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து விளக்கம் அளித்த ரஜினியும், கடிதத்தை வெளியிட்டது இல்லை, டாக்டர்கள் தனக்கு அளித்த அறிவுரைகள் உண்மை எனவும், தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையும் ரஜினி சூசகமாக கூறியிருந்தார். இதனால் அவரை பாஜக ஆதரவாளராக மாற்றி தமிழக சட்டமன்றதேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திக்கொள்ள பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனால், ஏற்கனவே உடல்நலம் பாதிக்க்கப்பட்டுள்ள ரஜினி கொரோனா பரவல் காரணமாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை மறுத்து வருகிறார். இந்த நிலையில் ரஜினிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும தகவல்கள் வந்தன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது, ரஜினியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள், ரஜினிக்கு காய்ச்சல் இருப்பதாகவும், அது கொரோனாவாக இருக்கலாம் என்பதால், அவர் அமித்ஷாவை சந்திக்கவில்லை என கூறப்பட்டது. அதுபோல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை எனவும் கூறப்பட்டது.
ஆனால், ரஜினிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்து வருவதாகவும், அதன் காரணமாக அவர், தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் போயஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரமாக ரஜினி வெளியே தலைகாட்டாத நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால், அவரது பிஆர்ஓ, ரியாஸ் அகமது, ரஜினியின் உடல்நிலை சரியில்லை என யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பியிருக்கிறார்கள், ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஆன்மிக அரசியல் அறிவிப்பு போலத்தான் ரஜினியின் உடல்நிலை குறித்த அறிவிப்பும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.