
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 30 ஆயிரம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் தனது மகள் ஸ்ருதியை முத்தமிடும் போட்டோவை கமல் பதிவிட்டிருந்தார்.

அதில் அவர், முந்தைய நாட்களில் நான் அவரை முத்தமிட குனிய வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. நான் முத்தமிட ஸ்ருதி குனிய வேண்டியிருக்கிறது. ஸ்ருதி அணிந்திருக்கும் ஹீல்ஸ் செருப்பால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என கமல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசிகர்கள் பலர் தமிழில் பதிவிடுமாறு அவரது பக்கத்தில் கமலை கேட்டுக் கொண்டனர். அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டு வந்தார்ர். ரசிர்கர்களின் வேண்டுகோளை ஏற்ற கமல், ஸ்ருதிக்கு முத்தமிடும் போட்டோவுக்கு தமிழில் கவிதை நடையில் பதிலளித்துள்ளார்.
அதோடு தமிழில் டைப் செய்ய, கீ போர்டில் உள்ள தானியங்கி கருத்து தெரிவிக்கும் முறையால் எழுத்துப் பிழை ஏற்படுவதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவது தான் ஒரு கலைஞனின் கடமை. அந்த கடமையை ஆற்றிய கமலுக்கு ஒரு ஓ…. போடலாம்.
Patrikai.com official YouTube Channel