ilayaraja_2553403f

சை ஞானி இளையராஜாவின் இசை நெகிழ வைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது ஒரு செயலும் அப்படியே அமைந்திருக்கிறது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன் தினக்கூலியாக வேலை பார்க்கிறார். சிறுவயதிலேயே பெற்றைரை இழந்த இவர், உறவினர் பராமரிப்பிலேயே வளர்ந்தவர்.

நாற்பத்தி நான்கு வயதாகும் இவருக்கு, புற்று நோய் இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. ஆரம்பத்திலேயே கவனிக்காததால் முற்றிய நிலை. “வாழ்நாள் குறைவு. ரவிச்சந்திரன் ஆசைப்பட்ட விஷயங்களை செய்துகாடுங்கள்” என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

மரணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு இளையராஜா இசை என்றால் உயிர். சாவதற்குள் ஒருறை இசைஞானியை சந்தித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்

இந்த்தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்பட, உடனடியாக அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்.

அதன்படி இளையாராஜா இசையமைக்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கு ரவிச்சந்திரன் அழைத்துச்செல்லப்பட்டார்.

இளையராஜாவைப் பார்த்ததும் ரவிச்சந்திரன், “எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உங்கள் ரசிகன். மகிழ்ச்சி, துக்கம் எதுவானாலும் உங்க பாட்டுதான் எனக்கு” என்று கண் கலங்க சொல்ல..

இளையராஜாவும் கலங்கிப்போய், ரவிச்சந்திரனுக்கு ஆறுதல் சொல்லி நீண்ட நேரம் பேசினார்.

தனது இசையால் கோடிக்கணக்கானவர்களை நெகிழ வைத்த இளையராஜாவே நெகி\ழ்ந்த அந்த காட்சியை கண்டவர்களும் கண்கலங்கிவிட்டார்கள்.

மனசிலும் ராஜாதான் இளையராஜா!