பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள விஜய்யின் புலி படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்தப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், ப்ரோமோ பாடல் ஆகியவை வரிசையாக வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
படத்தின் இயக்குநர் சிம்புத்தேவனின் படங்கள் அனைத்துக்குமே யு சர்ட்டிபிகேட்தான் கிடைத்திருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும்படி, படங்களை இயக்குபவர் சிம்புத்தேவன்.
சமீப காலமாக விஜய்யின் படங்களும் யு சான்றிதழ்களே பெற்றிருக்கின்றன. அவர் நடித்த ‘காவலன்’, ‘வேலாயுதம்’, ‘நண்பன்’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்களுக்கும் யு சான்றிதழே கிடைத்தது.
ஆனால் இன்னொரு பேச்சும் சினிமா வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. “படத்தில் ஒரு பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஸ்ருதி. அதையும் மீறி யு கிடைத்திருப்பது ஆச்சரியம்தான்” என்கிறார்கள்.
வரிவிலக்கு கிடைக்க வேண்டுமென்றால், யு சர்ட்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும் என்பதும் விதிகளில் ஒன்று.