5e20dbb36e30fbf3ca77a85466fa984c

யாருக்கும் ஆதரவில்லை:   இயக்குநர் சங்க தலைவர் விக்கிரமன் அறிவிப்பு

நாளை ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்கத் தேர்தல் IQ. இந்தத் தேர்தலில் கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் ஒருதலைப் பட்சமாக சரத்குமார் அணியை ஆதரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து அந்த சங்கத்துக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நிலையில் இயக்குநர்கள் சங்கம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

“இந்தத் தேர்தலில் எந்த அணியையும் இயக்குநர்கள் சங்கம் ஆதரிக்காது. நடுநிலை வகிக்கும். தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுடன் சுமுகமான உறவை பேணும்” என்று இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.