இந்தூர்:
மத்தியபிரதேச முன்னாள் முதல்வரும் சுந்தர்லால் பட்வா வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினர்.
92 வயதான பட்வா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
பட்வா, 1924ம் ஆண்டு பிறந்த சுந்தர்லால் பட்வா, ஆரம்ப காலத்தில் காங்கிரசின் தீவிர உறுப்பினராக இருந்தார். பின்னர் பாரதியஜனதா கட்சியில் சேர்ந்து முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
1980-ம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மாநில முதல்வராக பதவி ஏற்ற சுந்தர்லால் பட்வா ஒருமாதம் மட்டுமே பதவியில் நீடித்தார். பின்னர் 1990-ம் ஆண்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
ஆனால், அவரது துரதிருஷ்டம், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அவரது ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
பின்னர், 1997-ம் ஆண்டில் சின்ட்வாரா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தர்லால் ஒரு ஆண்டு காலமே எம்.பி.யாக பதவி வகித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் கேபினட் அந்தஸ்துடன் கூடிய மந்திரியாக பொறுப்பு வகித்தார்.
வயது முதிர்வு காரணமாக அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்துவந்த சுந்தர்லால் பட்வா இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரம் மரணம் குறித்த தகவல் அறிந்ததும், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் தனத டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
‘மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த சுந்தர்லால் பட்வா ஆற்றிய அரும்பணிகள் கட்சி தலைவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றவையாகும்.
மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக அவர் ஆற்றிய நற்பணிகள் நினைவில் கொள்ளத்தக்கவையாகும்.
கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையான உழைப்பின் மூலம் தன்னை அர்ப்பணித்துகொண்ட அவரது மறைவை அறிந்து கவலை அடைந்துள்ளேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’
இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.