கோவை
பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுப்பாளையம் கோவை இடையே 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன
நேற்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”கோவை ரயில் நிலையம் அருகே பொறியியல் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஞாயிற்றுக் கிழமை மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சொரணூர் – கோவை ரயில் (எண் 06458) சொரணூர் – போத்தனூர் இடையே மட்டும் இயக்கப்படும். அந்த நாட்களில் போத்தனூர் – கோவை இடையே இந்த ரயில் இயக்கப்படாது.
இது போல், கோவை- சொரணூர் ரயில் (எண் 06459) நாளை மறுநாள் மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் போத்தனூர் – சொரணூர் இடையே இயக்கப்படும்.
இதேபோல் நாளை மறுநாள் மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்க ளும் காலை 10.55 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப் படும் மேட்டுப்பாளையம் – கோவை ரயில் (எண் 06813) மற்றும் அதே நாள், கோவையில் இருந்து பகல் 11.50 மணிக்குப் புறப்படும் கோவை – மேட்டுப்பாளையம் ரயில் (எண் 06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.