மூணாறு: கேரளாவின் இடுக்கி மாவட்டம்  கேரளா மூணாறு அருகே ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்தது.
கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக, மூணாறு அருகே ராஜமலை  பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்ற வந்த தமிழகத்தை சேர்ந்த பல குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80பேர் வரை , பெட்டிமுடி பகுதியில் மலையடிவாரங்களில் குடிசைகள் அமைத்து தங்கி வந்தனர்.
கடந்த 6ந்தேதி நள்ளிரவு  ஏற்பட்ட நிலச்சரிவில் , தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் குடும்பத் தோடு மண்ணுக்குள் புதைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், 15 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 14 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 65 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலச்சரிவில் 70 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வரை 62 உடல்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில், அருகே  பெட்டிமுடி ஆற்றில் ஒரு சிறுமியின் உடல் மீட்கப் பட்டது.  . இறந்தவர் சிறுமியின் கவுசிகா 15, என அடையாளம் காணப்பட்டது. மேலும்  நிலச்சரிவில் சிக்கி பலியான மயில்சாமி மகள் சிவரஞ்சனி 17, முத்துலெட்சுமி 26, ஆகியோரின் உடல்களும் நேற்று மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.  மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது.