டில்லி

ரபு அமிரகத்தில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான உலக கோடைக்கால விளையாட்டு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 85 தங்கம் உள்ளிட்ட 368 பதக்கங்கள் வென்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடத்துக்கான மாற்று திறனாளிகள் உலக கோடைக்கால விளையாட்டு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.   இந்த போட்டிகள் கடந்த 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றன.  இதில் சர்வதேச அளவில் பல நாடுகளின் விளையாட்டு வீரர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்தியாவில் இருந்த் 284 விளையாட்டு வீரர்கள் கலந்துக் கொண்டனர்.   இந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 368 பதக்கங்கள் பெற்றுள்ளது.   அதில் 85 தங்கப் பதக்கக்களும் அடக்கம் ஆகும்.  இதைத் தவிர 154 வெள்ளிப் பதக்கங்களும் 129 வெண்கலப் பதக்கங்களும் இந்தியா வென்றுள்ளது.

இதில் பளு தூக்கும் போட்டியில் இந்தியா அதிக அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளன.   இப்போட்டியில் இந்தியா 20 தங்கம், 33 வெள்ளி மற்றும் 43 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளது.

அடுத்தபடியாக ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியா 49 பதக்கங்கள் பெற்றுள்ளது.  அதில் 13 தங்கம், 20 வெள்ளி மற்றும் 16 வெண்கலப் பதக்கங்கள் ஆகும்.

மூன்றாவதாக சைக்கிளிங் போட்டியில் இந்தியா 11 தங்கம், 14 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என 45 பதக்கங்கள்  பெற்றுள்ளது.   மற்ற போட்டிகளில் 5 தங்கம், 24 வெள்ளி, மற்றும் 10 வெண்கலம் எனஇந்தியா 39 பதக்கங்கள் பெற்றுள்ளது.