கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தார்.
அப்போது, உத்தரப்பிரதேச மாநிலம் ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகியவை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தன. உரிய கட்டமைப்புகள் இல்லாத நிலையிலும் அன்புமணி ராமதாஸ். அக்கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார்
இது தொடர்பாக புகார் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு பதிந்து சி.பி.ஐ. விசாரித்தது.
அமைச்சருக்குரிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உரிய கட்டமைப்புகள் இல்லாத அக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி அளித்ததாக அன்புமணி மீது சி.பி.ஐ. இரு வழக்குகளை பதிந்தது.
இந்த வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்தூர் மருத்துவக் கல்லூரி வழக்கில் அன்புமணி உள்பட 9 பேர் மீதும், ரோஹில்கண்ட் கல்லூரி வழக்கில் அன்புமணி உள்பட 6 பேர் மீதும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையை ஏற்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அன்புமணி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் நடந்தது.
இருதரப்பும் வாதமும் நிறைவடைந்த நிலையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அஜ்ய்குமார் ஜெயின் தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிபதி அசோக் குமார் ஜெயின் உத்தரவு இட்டார்.
பா.ம.க. கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று அன்பு்மணி அறிவிக்கப்பட்டு, அதற்காக அமெரிக்க ஒபாமா பாணியியில் வித்தியாசமான புகைப்படத்துடன் தமிழகமெங்கும் போஸ்டர்கள் பா.ம.க. மேலிடத்தால் ஒட்டப்பட்டு வருகின்றன.
“மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி” என்றும் “50 ஆண்டுகால ஊழலுக்கு முற்றுப்புள்ளி” என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அப்போதே, அந்த போஸ்டர் வாசகங்களையும் அன்புமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களையும் தொடர்பு படித்தி சமூகவலைதளங்களில் பதிவுகள் பல வந்தன.
இந்த நிலையில் அன்புமணி மீதான ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.