புதுக்கோட்டை
முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிகக் கோரி தீர்மானம் இயற்றியும் பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இதைக் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்
”சட்டம் ஆங்கிலத்தில் இருக்கும் போது ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்க வேண்டும். வரைவுச் சட்டம் ஆங்கிலத்தில் தான் தயார் செய்யப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் சட்டத்தை இயற்றிவிட்டுப் பெயர் மட்டும் ஹிந்தியில் வைக்கிறார்கள்.
தமிழகத்தின் நீட் தேர்வு விலக்கு கோரிக்கை என்பது நியாயமாகும். எனவே திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் சரியானதாகும். நான் ஏற்கனவே தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்பதற்கான பல காரணங்களைக் கூறியுள்ளேன். ஆனால் மத்திய அரசு அசைந்து கொடுப்பது போன்று எனக்குத் தெரியவில்லை”.
என்று கூறியுள்ளார்..