Modi
பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சுக்கு சென்றார். பெல்ஜியத்தில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்திய மால்பீக் சுரங்க ரெயில் நிலையத்துக்கு சென்று, தீவிரவாத தாக்குதல்களில் பலியான தமிழர் ராகவேந்திரன் கணேசன் உள்ளிட்டவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பெல்ஜியம் பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா சென்ற மோடி, அங்கு நடைபெற்ற இரண்டு நாள் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மோடி தனது இரண்டு நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று சவுதி அரேபியா சென்று சேர்ந்துள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள அவர், அங்கு பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, வர்த்தகம், அணு ஆற்றல் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பயணத்தின் முக்கிய நிகழ்வாக, அந்நாட்டு அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல்-சவூதை நாளை சந்தித்துப் பேசவுள்ளார்.