12243414_1754450181445458_6110964687947569320_n

ங்கள் ஊர்(குடியாத்தம், வேலூர் மாவட்டம்) கெளண்டன்ய மகா நதியில் சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று இரவு முதல் தண்ணீர் ஓடுகின்றது. பார்க்க, பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ஆனந்தத்தில் கண்ணில் நீர் தளும்புகிறது. ஊர்மக்கள் ஏதோ திருவிழா போல குடும்பம் குடும்பமாக வந்து நீரில் நின்று செல்பி எடுத்துக் கொண்டும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டும்

 

11254290_1754450154778794_3778091565280530961_n
விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர். ஒரு பக்கம் சில பேர் தங்கள் வண்டிகளை ஆற்றுக்குள் இறக்கி கழுவுகின்றனர், இன்னொரு பக்கம் மாட்டை குளிப்பாட்டுகின்றனர், வேறொரு பக்கம் கரையோர வீடுகளில் வசிப்பவர்கள் ஆற்றோரமாக துணிகளை துவைக்கின்றனர். மக்களின் வாழ்க்கை முறைகளையே இந்த ஆற்று நீரோட்டம் மாற்றி விடுகிறது.

 

12294813_1754450201445456_1649667660215034397_n

சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் நாங்கள் உண்மையில் ஆற்றை எந்த கதியில் பராமரிக்கிறோம் என்று பார்த்தால் அது படுகேவலமாக இருக்கிறது. ஆற்றின் பாதிவரை வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்வீடுகளுக்கு மின்சார இணைப்பு, வீடுகளுக்கு முகவரி சான்றாக ரேஷன் கார்டு மற்றும் இன்னபிற வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டுள்ளது.

போதாதற்கு நகராட்சியே ஒருவழிப்பாதை போக்குவரத்திற்காக ஆற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ரோட்டை போட்டு ஆற்றை குறுக்கி விட்டுடிருக்கிறது. ஆற்றில் நிறைய இடங்களில் முள்செடிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து தண்ணீரின் போக்கை தடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த அவலங்களையெல்லாம் நாங்கள் என்று களையப்போகின்றோம் எனத் தெரியவில்லை. ஆனால் ஆறு தன்போக்கில் எங்களை ஏளனமாக பார்த்துகொண்டு சென்றுகொண்டிருக்கிறது..அதன் ஏளனத்தை பார்த்து நாங்கள் தலைகுணிந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.