ulsoor fishes
 
பெங்களூருவில் உள்ள புகழ் பெற்ற உள்சூர் ஏரியில் கடந்த திங்கட் கிழமையன்று ஆயிரக்கணக்கான மீன்கள்  கொத்து கொத்தாக இறந்து மிதந்தது  ,சமூக ஆர்வலர்களிடையே  அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது . கர்நாடக அரசின் மெத்தனப் போக்கே  இதற்கு காரணம் என குற்றம் சாட்டப் படுகின்றது .
இறந்த மீன்கள் மிதக்கும் கூவமாக உள்சூர் ஏரி  மாறி வருவது  வருடாந்திர நிகழ்வாக சித்தரிக்கப் பட்டாலும், இதனை இயற்கை நிகழ்வாக கருத முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் .
ஒவ்வொரு வருடமும்  முதல் மழையின் பொழுது மீன்கள்  இறப்பது வாடிக்கை ; ஆனால் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சம்பவம் ஒரு மீன்- படுகொலையாகவே  கருதுவதாக தென்னிந்திய ஏரிகளின் மேம்பாட்டிற்காக போராடும்  “தேவ்வையா கூறுகிறார்.
பெங்களுரூ பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் சூட்ஷி  பாலே கடந்த பத்து வருடங்களாக பெங்களூருவின் நீர் நிலைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். இவரும்  தேவ்வையாவின் கருத்தையே   பிரதிபலித்தார் .   அவர் கூறுகையில் ” குப்பைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை   முறையாக சுத்திகரிக்காமல்   சட்டவிரோதமாக ஏரிகளில் கலக்கவிடுவது தான் மீன்கள் மரணமடைவதற்கு முக்கிய காரணம் .  பெரும்பாலும்  இத்தகைய நடவடிக்கைகள் இரவு நேரங்களில் அரங்கேற்றப்  படுகின்றன. தொழிற்சாலை கழிவுகளும் சாக்கடை நீரும் ஏரிகளில் கலக்கப் படுவது ஊரறிந்த ரகசியமாவே உள்ளது.
ஆறு மாத  கால  கழிவுக் கட்டிகள் உடனடியாக ஏரிகளில் கலக்கப்படும்  போது  மீன்கள் மரணமடைகின்றன . ஏனெனில் இந்த கழிவுக் கட்டிகள் மிகுந்த விசத்தன்மை உடையது.
உள்சூர் ஏரியை அழகுப் படுத்த ப்ரெஸ்டீஜ் நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது .  அந்நிறுவனமோ , ஏரியைச் சுற்றி உள்ள பகுதிகளில்  பராமரிப்பு மற்றும் அழகுப் படுத்தும் பணியினில் மட்டும் ஈடுபட மட்டுமே    ஒப்பந்தம்  போடப் பட்டுள்ளதாகவும் , ஏரியின் உள்ளே தூர் வாருவது தங்களின் பணி அல்ல என்றும்  விளக்கம் அளித்துள்ளது.
ஒன்பது கோடி மதிப்பீட்டில் உள்சூர் ஏரியை சுத்தம் செய்ய கர்நாடக  அரசு திட்டமிட்டு இருந்தது.ஆனால்  அந்தப் பணியை செய்ய  இருந்த  ரந்தவா குழுமம்   அரசின் மெத்தப் போக்கால் தொடங்கப்  படவே இல்லை என வருத்தம் தெரிவித்து உள்ளது . நைனிடால் ஏரி , உதகமண்டலம் ஏரிகளை சுத்தம் செய்த ரந்தவா   குழுமத்தின் தலைவர் சுக்விந்தர் ரந்தவா கூறுகையில், “கழிவுகள் ஏரி  நீரில் கலக்கப் படுவதால் ,நீரில் உள்ள  கழிவுகளை வினையாற்றவே  பிராண வாயு  தீர்ந்து விடுவதால் , பெரும்பாலான ஏரிகளில்  பிராணவாயு  குறைந்தே காணப் படுகின்றன  . இதில் அரசியல் ஆதாயம் எதுவும் இல்லாததால் , அரசுகளின் காதுகளுக்கு எங்களின்  பரிந்துரைகள் கேட்கவே இல்லை” என வேதனை தெரிவித்தார்.
உள்சூர் ஏரி ஒவ்வொரு வருடமும் சுத்தப் படுத்தப் படுவதாகவும் , மீன்கள் இறந்தது குறித்து ஏரி  நீரை பரிசோதித்த பிறகே  கருத்துக் கூற முடியும் எனவும் கர்நாடக அரசின் மாசுக் கட்டுப் பாட்டு வாரிய உறுப்பினர் ஜெயப்ரகாஷ் ஆல்வா கூறினார் .
ஆனால் அரசுப் பதிவுகளின் படி , கர்நாடக அரசு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் உள்சூர் ஏரியை  மாசுப் பட்ட ஏரியாகவும், வறண்ட ஏரியாகவும்  வகைப்படுத்தி உள்ளதென   கூறுகிறார் தேவ்வையா .
ஏரிகள் தூர் வாரப் படும் பொழுது ஏரிப் படுகைகளில் சேதம்  ஏற்பட்டு நீர் தேக்கி வைக்கும் திறனை இழந்துவிடும் வாய்ப்பும் உள்ளது .
“பிப்ரவரி 1988 யில் , பெரும் பொருட்செலவில் உள்சூர் ஏரி  சுத்தம் செய்யப் பட்டது . அப்பொழுது தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப் பட்டு தூர் வாரப் பட்டது. ஆனால் கடந்த   ஐந்து வருடங்களாக போதிய  பராமரிப்பின்மையால் ஏரியின் நிலைமை  மிகவும் மோசமடைந்து உள்ளது . மீண்டும் தூர் வாரப் படவேண்டியது அவசியமாகியுள்ளது
இதற்கு மாற்றாக  நுண்ணுயிரிகள் தூவுவது பெல்லந்துர் ஏரிக்கு பரிந்துரை செய்யப் பட்டது . ஆனால்  நுண்ணுயிர்கள் வளர பிராண வாயு தேவை . ஆனால் தற்பொழுது ஏரிநீரில் பிராண வாயு எங்கே உள்ளது ?” என்கிறார் தேவ்வையா
“பெங்கலூரில் கடந்த பத்தாண்டுகளில் தும்பி களின் எண்ணிக்கை அருகிவிட்டது. . கொசுவை உண்டு வாழும் தும்பியை தற்பொழுது காண முடிவதில்லை. இதனால் பெங்களூருவில் கொசுத் தொல்லை அதிகமாகிவுள்ளது” என்றார் பேராசிரியர் சூட்ஷி  பாலே .