சென்னை:  நாடு முழுவதும் இன்று ஜிஎஸ்டி குறைப்பு அமலாகி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு, ஆவின் பால் விலையை குறைக்காத நிலையில், பால் பொருட்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில்,  தனியார்  பால் நிறுவனங்கள்  பால் பொருட்களின் விலையை குறைத்துள்ளன.  இதன் காரணமாக ஆவின் பால் விலையும் குறைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆவின் பால் விலையை குறைக்காத தமிழ்நாடு அரசு, ஆவின் பால்  பொருட்களின் விலையை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர்-3 அன்று நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் UHT பால் மற்றும் பனீர் வகைகளுக்கு ஜிஎஸ்டியில் (5%) இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 12%லிருந்து 5% ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளுக்கு 18%லிருந்து 5% ஆகவும் ஜிஎஸ்டியை குறைப்பதென்றும் மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி குறைப்பு இன்றுமுதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பு  அடிப்படையில் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

ஆவின் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை 690 ரூபாயில் இருந்து 650 ரூபாயாகவும், 250 கிராம் பனீர் பாக்கெட் விலை 120 ரூபாயில் இருந்து 110 ரூபாயாகவும், 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45, 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி குறைச்சாச்சு – ஆவின் பால் விலையை ஏன் குறைக்கல! திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி…