சூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,மாநில செயலாளர் சண்முகம் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார்.

சணமுகம் அப்போது செய்தியாளர்களிடம்,

“தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு நீர் கலப்பதால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. இதனை தடுக்க, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தமிழக அரசு தனிக்குழு அமைக்க வேண்டும்.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்தி உள்ளனர். இது ஒரு கிலோவிற்கு 70 பைசா கூட வராது. எனவே, குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்க வேண்டும்.

அவரவருக்கு அவர்களது தாய்மொழி மேலானது. அந்த வகையில், கன்னட மக்கள், தங்களது மொழி குறித்து பெருமை பேசிக்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. நடிகர் கமல், மொழியியல் வல்லுனர் இல்லை. ஏற்கனவே வல்லுனர்கள் கூறிய கருத்தைத்தான் அவர் தெரிவித்துள்ளார்.

இதை கருத்து ரீதியாக எதிர்கொள்வதற்கு பதிலாக, கர்நாடகாவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, இருமாநில பிரச்னையாக மாற்றுவது, பாஜவின் திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. அதனை முற்றிலும் தடுக்க வேண்டும்.”

என்று கூறி உள்ளார்.