இந்தப்பக்க கடைசி சேரில் சோ. அந்தப்பக்க கடைசி சேரில் பழ.கருப்பையா
இந்தப்பக்க கடைசி சேரில் சோ. அந்தப்பக்க கடைசி சேரில் பழ.கருப்பையா

 
மீபகாலமாக ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்து வந்த பழ .கருப்பையா அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார்.  இதையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ கருப்பையா,  முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் அவரது வீடு தாக்குதலுக்கு உள்ளானது. இதற்கு அதிமுகவினரே காரணம் என்றார்.
சோ ராமசாமி ஆசிரியராக இருந்து வெளியிடும் “துக்ளக்” பத்திரிகை ஆண்டுவிழாவில் பழ.கருபபையா மிகவும் காட்டமாக பேசியதுதான் நீக்கத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலக்கிய பேச்சாளரும், அரசியல் பிரமுகருமான நெல்லை கண்ணன்,  இது குறித்து தனது பதிவில் எழுதியிருப்பதாவது:
“ஜெயலலிதாதான் பழ.கருப்பையாவை அந்தக் கட்சியில் சேர்த்துக் கொண்டு துறைமுகம் தொகுதியில் அவரை நிறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கியது. அந்த நேரம் அவரை அவர் சட்டப்பேரவைத் தலைவராக ஆக்குவார் என்று பலர் என்னிடம் சொன்ன போதும், உறுதியாக மாட்டார் என்றேன் – ஏனெனில் கருப்பையா சுதந்திரமானவர். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பளித்து விடுவார் என்று சொன்னேன்.
சோவை மருத்துவமனையில் சென்று ஜெயலலிதா அவர்கள் சந்தித்து பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க என்ற வீடியோவை வாட்ஸப்பில் போட்டவரின் கதி என்ன என்று தெரியும். அந்த சோ விழாவில் தானே போய் கருப்பையா பேசினார். உத்தமர் சோ இதைப் பற்றி வாய் திறக்கவில்லையே ஏன்? இந்த அக்கிரமத்தைக் கண்டிக்கவில்லையே.
மக்கள் நலக் கூட்டணி ஒவ்வொரு தொகுதியிலும் 3000 வாக்குகளுக்கு மேல் வாங்காதாம் தமிழர் ராஜா (பாஜக) சொல்லுகின்றார். பழ.கருப்பையா மக்கள் நலக்கூட்டணிக்குப் போவதே தமிழர்களுக்கு நல்லது.