
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 08.04.2011 அன்று பிரசாரம் செய்த போது பேசியதாவது:
“இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை மதிக்கும், மரியாதையுடன் நடத்தும் தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்தரப்பில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், ஒரே மேடையில் பிரசாரம் செய்ய முடியாத நிலையில் ஒரு கூட்டணியும் உள்ளது.
விஜயகாந்த் கதைஇந்த தேர்தலுடன் முடிந்து விடும். அவரது முதல்வர் கனவும் பலிக்கப் போவதில்லை.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய விஜயகாந்த், தனது கட்சி சின்னம் ‘கொட்டும் முரசு’ என்பதை ‘குட்டும் முரசு’ என்கிறார். அண்டப்புழுகு, ஆகாசப்புழுகு என தினமும் பொய் பேசுகிறார். இதுபோன்ற மக்கள் விரோத கூட்டணி ஜெயிக்க வேண்டுமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து உள்ளனர்” –
இவ்வாறு திருவாவளவன் பேசினார்.
Patrikai.com official YouTube Channel