பத்து ரூபாய் செலவில் ஒரு பிரபல அரசியல் தலைவரின் திருமணம் முடிந்தது” என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
1948ம் ஆண்டு, பத்மாவதி எனற பெண்மணியை திருமணம் செய்ய முடிவு செய்தார் ஜீவா. தனது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான பத்துக்கும் உட்பட்ட தோழர்களை மட்டும் அழைத்தார்.
அவர்களில் ஒருவரிடம் பத்து ரூபாயைக் கொடுத்து இரண்டு மல்லிகைப்பூ மாலையும் மீதமுள்ள பணத்திற்கு ‘சாக்லேட்’ மிட்டாய்களையும் வாங்கி வரச் சொன்னார்.
மணமக்கள் அந்த மல்லிகைபூ மாலையை மாற்றிக்கொண்டார்கள்: அங்கிருந்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு சாக்லேட் கொடுத்து, “திருமணம் முடிந்து விட்டது.. எல்லோரும் போகலாம்” என்று வழியனுப்பி வைத்தார் தோழர் ஜீவா.
பிரம்மாண்ட திருமணங்களை பார்த்துப்பழகிய நமக்கு இதை நம்புவதுகடினம் தான்!