மும்பை:

பசு பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதிகள், தங்கள் மூதாதையர்கள் போல் பசுக்களுக்கு பணிவிடை செய்ததுண்டா?என பழம்பெரும் தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.


தனது பாட்டியின் சுயசரிதையின் ஆங்கில மொழியாக்க நூலை வெளியிட்டு அவர் பேசியதாவது;

என் தாத்தா ஜம்னலால் பஜான் குடிலில் தான் வசித்தார். அவரே மாடுகளைக் குளிப்பாட்டுவார். ஆனால் இன்று நாம் மாடுகளுக்காக பிறரைத் தாக்கிக் கொலை செய்கிறோம். அந்த அரசியல்வாதிகளின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.

பசுவை மாதா என்று அழைப்பவர்களே, பசுவை எப்படி கவனித்துக் கொண்டீர்கள் என உங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பசுக்களை பராமரிக்க மூதாதையர்கள் செய்ததில், பசுக்காக போராடுபவர்கள் 95 சதவீதம் செய்திருக்கமாட்டார்கள் என்றார்.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின், பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறி, இறைச்சியைக் கொண்டு சென்ற முஸ்லீம்கள் பல மாவட்டங்களில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்ற இடத்தில் முகமது அக்லாக் என்ற முதியவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக கும்பலால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு தொடர்ந்து பல சம்பவங்களை பசு பாதுகாவலர் என்ற பெயரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.