v n
 வேனுக்கு முன்னால் கட்டப்பட்ட பேனரில் ராம கோபாலன் ‘தப்ஸ்-அப்’ காட்டி இளைஞர்களை உற்சாகமூட்டுகிறார். (தம்ஸ்-அப் காட்டுவது கிருஸ்துவ முறையில்லையோ?)

வினாயகரை ஏந்திய வேன், புதிய சிந்தனையுடைய இளைஞர்களால் பிதுங்கி வழிந்து தள்ளாடுகிறது. இடுப்பைத் தூக்கி ஆட்டி ‘ஏ இந்தா, ஏ இந்தா’ என்று பிள்ளையாரின் முகத்துக்கு அருகில் குத்துகிறார்கள். சட்டசபையில் விஜயகாந்த் நாக்கைக் கடித்துக் காட்டியதுபோல ஒரு இளைஞன் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை மிரட்டுவதற்காக நாக்கைக் கடித்துக் காட்டுகிறான். ஒருவன் ஐயனார் சிலை போல முறைத்துக் காட்டுகிறான். ஒருவன் சவுகுக் கட்டையால் கம்பு சுற்றிக் காட்டுகிறான். எதிரில் பயந்தபடி நகர்ந்து வரும் ஒரு காரை கட்டையால் ஓங்கி அடிப்பதுபோல ஓடுகிறான். அந்த கார்க்காரர் இன்னும் பயந்ததும் இவன் தன் சகாக்களைப் பார்த்துச் சிரிக்கிறான். த்தா…, ஓரமாப்போடா என்று ஆள்காட்டி விரலைக் காட்டுகிறான் இன்னொருவன்.

நெற்றி நிறைய குங்குமம் வைத்து பூவும் பொட்டுமாக பேருந்தில் அமர்ந்திருக்கும் பெண்களைப் பார்த்து நரி போல ஊளையிடுகிறான். இன்னும் கொஞ்சம் இடுப்பைத் தூக்கி ஆட்டி டப்பாங்குத்து ஆடிக் காட்டுகிறான்.

பட்டப்பகலில் ஹெல்மெட் போடாமல் ஒரு வண்டிக்கு நான்கு பேர், மூன்று பேர்; அத்தனை பேரும் மூக்கு முட்டக் குடித்துவிட்டு வேனுக்கு முன்னால் டூ-வீலரில் பிள்ளையாருக்கு பாதுகாப்பாக வருகிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் பாதுகாப்பாக போலீசு.
கடைசியில் பிள்ளையார் ஊர்வலம் அமைதியாக கடற்கரையில் முடிகிறது.

ஆனால் ஒன்று. இந்துக்களை இழிவுபடுத்த, பிள்ளையாரைக் கேவலப்படுத்த அமெரிக்காவிலிருந்தோ அரேபியாவிலிருந்தோ வெளியாட்கள் யாரும் வேண்டாம். இந்து முன்னணி ஒன்று போதும். மக்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள்.

எது எப்படியோ, அடுத்த வருடம் பிள்ளையார் ஊர்வலத்து பேனர்களில் ராம கோபாலன் நடுவிரலை உயர்த்திக்காட்டியபடி போஸ் கொடுப்பார் என்பதில் இந்துக்கள் யாருக்கும் சந்தேகமில்லை!!