“ஆற்றங்கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வு; அதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு”
பொருள்:
ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான மரமும், திடீர் வெள்ளப்பெருக்கால் எதிர்பாராமல் விழுந்துவிடக்கூடும். அதுபோல அரசரும் போற்றும்படி உயர்ந்திருந்த வாழ்வும் ஒருநாள் சரிந்துவிடும். இது உண்மை.
ஆகையால், நிலத்தை உழுது பயிரிட்டு உண்ணும் வாழ்க்கையே சிறந்தது. அதற்கு ஈடு வேறில்லை. மற்ற தொழில்களில் குறைபாடுகள் உண்டு.
அவ்வையாரின் நல்வழி (12)
https://www.facebook.com/natarajan.sundharabuddhan?fref=photo