Skip to content
  • Fri. Sep 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

நிவர் புயல் எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை சாலை உள்பட கடற்கரை சாலைகளை மூட காவல்துறை உத்தரவு…

Nov 25, 2020
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை உள்பட பல்வேறு கடற்கரை சாலைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து,  கடற்கரை சாலைகளில் வாகனங்கள் செல்லவும்  தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மேலும் தீவிரம் அடைந்து  அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,  கடற்கரையோர ஊர்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.   கடலூர் மாவட்டத்தில் குடிகாடு, சித்திரைப்பேட்டை, ஐயம்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் வாழும் மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில்,  சென்னையிலும், கடற்கரை பகுதிகளில் வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை  மெரினா கடற்கரை,  காமராஜர் சாலை, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், எண்ணூர் நெடுஞ்சாலை உள்பட கடற்கரை சாலைகள் மூட சென்னை காவல்துறை ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.
நிவார் சூறாவளி கடலோரப் பகுதிகளைக் கடக்க வாய்ப்புள்ளதாலும், புயல் கரையை கடக்கும் போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் சென்னை காமராஜ் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தம் செய்யப்பட்டு கடற்கரை சாலைகளில் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

நிவர் புயல்: திமுகவினர் களமிறங்கி உதவ ஸ்டாலின் வேண்டுகோள்…
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது…

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer