சென்னை
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம் நிதி அமைச்சர்நிர்ம்லா சீதாராமனை சந்திக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்/
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கத்தொடங்கி விட்டன.
மேலும் கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகள் தற்போதே முடிவுகளை எடுக்கத்தொடங்கி விட்டன. கடந்த சில நாட்களுக்குமுன் டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர்அமித்ஷாவை சந்தித்தார். அன்று இரவே, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நேற்று சென்னை வந்து தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பங்கேற்றார். பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியானது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் ர் வேல்முருகன் ஆகியோரும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தால் உங்களிடம் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை’
என்று தெரிவித்துள்ளார்