டெல்லி:
நரேந்திரமோடி மொபைல் அப்ளிகேஷனை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் டவுன்லோடு செய்ய பள்ளிகள் வலியுறுத்துமாறு சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நரேந்திரமோடி மொபைல் அப்ளிக்கேஷனை டவுன் லோடு செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமருடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘மாணவர்கள் தேர்வை நம்பிக்கையுடன் எழுத வேண்டும். எனது மொபைல் அப்ளிகேஷனுக்கு வரும் தகவல்கள் மூலம் மாணவர்கள் நம்பிக்கையுடன் இருப்பது தெரிகிறது. அதனால் மன அழுத்தம் இன்றி தேர்வு எழுதுவது தொடர்பான அனுபவங்களை இந்த அப்ளிகேஷனில் மாணவர்கள் பிகர வேண்டும்’’ என மோடி கடந்த ஜனவரி 31ம் தேதி வானொலியில் பேசினர். இந்த பேச்சுக்கு பிறகே சிபிஎஸ்இ வாரியம் அனைத்து பள்ளிகளுக்கு இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
‘தேர்வு குறித்த அனுபவங்களை நரேந்திர மோடி மொபைல் அப்ளிகேஷனில் பகிர்ந்து கொள்ளலாம். அதேபோல் பெற்றோரும், ஆசிரியர்களும் தங்களது அனுபவங்களை பகிரலாம். இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தேர்வு தொடர்பான மன அழுத்தம் குறையும்’ என அந்த சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.