தோனி வாழ்க்கை படத்தி நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் நேற்று மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியபடிபைணமாக கிடந்தார். அவரது மரணம் பாலிவுட் திரையுலகினரை மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று இறுதி சடங்கு நடக்கவுள்ளது.


சுஷாந்த் திடீர் மறைவுக்கு காரணம் என்ன என்பது குறித்து மும்பை போலீஸ் விசாரித்து வருகிறது, இந்நிலையில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவாது தாய்மாமன் ஆர்.சி.சிங் அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறார். அவர் கூறும்போது,’ ’இது ஒரு கொலை, தற்கொலை அல்ல’ என்றார், மேலும் சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுஷாந்தின் தாய் மாமன் ஆர்.கே.சிங்கின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த்தின் சொந்த மாநிலமான பீகாரை சேர்ந்த இளைஞர்கள் சிங்கின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின் றனர்.

அதேபோல் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ் சிபிஐ விசாரணை கோரி உள்ளார்.

#Is Sushant Singh Rajput murdered, CBI Probe?
#Uncle R,C.Singh Demand #CBI Enquiry #Pappu Yadav #JAP
#சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலையா?
#தாய் மாமன் #சிபிஐ விசாரணை கோரிக்கை #பப்பு யாதவ் #ஜெஏபிகட்சி