sara

சரத்தை டார்ச்சர் செய்யும் ஃபோர் ட்வென்ட்டி

டிகர் சங்க தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் என்று முக்கிய பதவியை விஷால் அணி கைப்பற்றியதும், சரத்தும், “இனிமே  அவங்க பேச்சத்தாண்டா நீ கேக்கோணும்” என்று தனக்குத்தானே நாட்டாமை தீர்ப்பு சொல்லிக்கொண்டதும் தெரிந்த கதை.

ஆனால் அவர் தனது தோல்வியை  இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டார். ஆனால்  செயற்குழு தனது அணி செயற்குழு உறுப்பினர்கள் தோற்றதுதான்  மனதுக்குள் டார்ச்சர் செய்துகொண்டே இருக்கிறதாம்.

அதாவது  மொத்தமுள்ள செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 24.  இதில், விஷால் அணியில் ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பூச்சி முருகன், பசுபதி, பிரசன்னா, சங்கீதா உள்ளிட்ட 20 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சரத்குமார் அணியில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகிய 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.  ஆக,    சரத் 4,  விஷால் 20.

இந்த 4, 20தான் அவரை படாதபாடு படுத்துகிறதாம்.

“நமக்கு 13 பேர் கிடைத்திருந்தால் கூட நல்லா இருந்திருக்கும்” என்று  சகாக்களிடம் ஆதங்கப்படுகிறாராம்.

ஏன் அப்படி?

பொதுக்குழுவில் பாதிக்கு மேல் (13) தன் வசம் இருந்தால், புதிய நிர்வாகம் கொண்டுவரும் தீர்மானங்களில் தங்கள் பலத்தை காட்டலாம். இப்போது அதுவும் முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்தானாம்.