பாரதிராஜாவின், “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் அறிமுகமாகி, அக்னி நட்சத்திரம், வருசம் பதினாறு, என்று பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனான இவர், தொடர்ந்து பல வருடங்கள் மாஸ் ஹீரோவாக திகழ்ந்தார். ஆனால் தவறான பழக்கங்கள் காரணாக, படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, வராமலே இருப்பது போன்ற உபத்திரவங்களை தர, தமிழ் சினிமா இவரை ஓரம்கட்சியது. பிறகு நாடாளும் மக்கள் கட்சி என்று ஒரு கட்சியை ஆரம்பித்தார்.
தென் மாவட்டங்களில் வசிக்கும் இவரது சாதி இளைஞர்கள் சிலர் இவர் பின்னால் அணிவகுத்தனர். ஆனால் தேர்தலில் சில நூறு வாக்குகளே பெற்றது இவரது கட்சி.
மேலும் தனது பழக்கங்களை மாற்றிக்கொள்ளாத கார்த்திக்கின் நடவடிக்கைகள் சிரிப்புக்கு இடமாயின. பத்திரிகையாளர் சந்திப்புக்கு அறிவித்துவிட்டு வராமல் இருப்பது, கேள்விக்கு தொடர்பில்லாத பதிலைக்கூறுவது என்று இவரது ரகளை தொடர்ந்தது.
கடந்த தேர்தலின்போது இல்லாத தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தும் “சாதனை” புரிந்தார்.
இதற்கிடையே இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் நேற்று மீண்டும் உடல் நிலை மோசமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளை அவருக்கு ஆபரேசன் நடக்க இருப்பதாகவும், அதன் பிறகு வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது