12592347_1038975326162476_5345523643373824055_n
ந்திய தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் திலீபன்  மகேந்திரன் போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டதாகவும், அதில் அந்த இளைஞரது கை உடந்துவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மை அல்ல என்று தெரியவருகிறது.
கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், தான் இந்திய தேசிய கொடியை எரிப்பது போன்று படம் எடுத்து அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். வேறு பலர், திலீபன் மகேந்திரனுக்கு ஆதரவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிலர் காவல்துறையில் முறையீடு செய்தனர். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திலீபன் மகேந்திரனின் முகநூல் பக்கத்திலேய அவரது முகவரியும் இருந்தது.  நாகப்பட்டினத்தை சேர்ந்த அவர், தனது பணி நிமித்தம் சென்னையில் வசிப்பதையும் காவல்துறையினர் அறிந்தனர்.  இதையடுத்து  சில நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார்.
CZ8W3ugUcAADYmo
இந்த நிலையில், “திலீபன் மகேந்திரனை கைது செய்த போலீசார், அவரை கடுமையாக தாக்கினர். இதில் அந்த இளைஞரது கை உடைந்துவிட்டது” என்று முகநூல் உட்பட சமூகவலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“சட்டத்திற்கு புறம்பாக, அந்த இளைஞரை காவல்துறையினர் அடித்து கையை ஒடித்திருப்பது காட்டுமிராண்டித்தனம். அந்த காவலர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பலர் முகநூலில் காட்டமாக எழுதி வருகிறார்கள்.
அந்த இளைஞர் “தந்தை பெரியார் திராவிடர் கழக”த்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுவதால், அந்த அமைப்பினர் சிலரிடம் பேசினோம். அவர்களும், மேற்கண்ட கருத்தையே பிரதிபலித்தனர்.
“திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டது உண்மையே. ஆனால் காவல்துறையினர் தாக்குதல் நடத்தவில்லை.  காவல்துறையினர் தாக்கியிருந்தால், கையில் கட்டுடன் புகைப்படம் எடுக்கவும், அதை வெளியில் பகிரவும் அனுமதிப்பார்களா? கையில் கட்டுள்ள படம் பழைய படம்தான்” என்றவர்கள், “சமூகவலைதளங்களில் பலர், உண்மை நிலையை ஆராயாமல்,ஆர்வ மிகுதியால் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று தங்கள் வருத்தத்தையும் தெரிவித்தார்கள்.