பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக  நடிகர் சிவகார்த்திகேயனுடன் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் நடந்தவை குறித்து மனம் நொந்து  பலரும் தங்கள் ஆதங்கங்கத்தை சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
அவர்களில் ஒருவரான கமலா பாலசந்தர் என்பவரின் முகநூல் பதிவு  இது:
Sivakarthikeyan-Vijay-tV-Pongal-celebration (1)
இரண்டு பெண்களின் தகப்பன் பேசுகிறேன்.
*****************************************
நேற்று விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன், கல்லூரி பெண்கள் சிலர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது.
அதில் ஒரு பெண் சிவகார்த்திகேயனுக்கு  வீட்டிலிருத்து பொங்கல்  கொண்டு வந்து ஊட்டி விட்டே ஆக வேண்டும்  என்று ஊட்டி விடுகிறார். இன்னொரு பெண்  “நீங்கள் என்னை தொட்டு தூக்க வேண்டும்” என  அடம் பிடிக்கிறார்.
நடிகர்  சிவகார்த்திகேயன், “நாகரீகமா என்னை வீட்டுக்கு போக விடமாட்டீங்க போலிருக்கே…” என்று தன் தர்ம சங்கடத்தை மறைமுகமாக கூறியும் அந்த பெண்கள் விடவில்லை.
தன்னை சுற்றி பல அன்பான உறவுகள் இருக்கும்போது, யாரோ ஒரு நடிகன் மீது ஏன் தன்னை தொட்டு தூக்க வைக்கும் அளவிற்கு அப்படி என்ன அன்பு?
விளங்கவே இல்லை நவீன தமிழச்சிகளே..!.
பணம் செலவழித்து படம் பார்த்ப்பது இரண்டரை மணி நேர பொழுது போக்கு மட்டுமே என்பதை  உணருங்கள்.!
அதை கடந்து அந்த நடிகனை மன்மதனாக பார்க்காதீர்கள்! உங்கள்  மணாளனை மன்மதனாகப் பாருங்கள்.!  சிந்தியுங்கள்!
இப்படி கேவலமாக நடந்து கொள்ளும் பெண்களும், அதைக் கண்டிக்காத, கண்டுகொள்ளாத பெண்கள் அமைப்புகளுக்கும், ஏதாவது தவறுநடந்தால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணினத்தைக் காக்க வந்த ரட்சகர்கள் போல் பேசுவது பச்சை ஏமாற்றுவேலை.
பெண்கள் தவறாக நடத்து கொள்ளும்போது அதைக் கண்டிக்காத, அவர்களை சரியாக வழி நடத்த எந்த முயற்சியும் எடுக்காத பெண்களுக்கும், பெண்கள் அமைப்புகளுக்கும், தவறுகள்
நடக்கும் போது குரலெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை.!
அப்போது மட்டும் கொதித்து எழுபவர்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை வைத்து பிரபலமாகத் துடிப்பவர்களே.
தவிர பெண்கள் இப்படி அதுவும், ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில்  நடநது கொள்ளும்போது பார்தது, பெருமையடையும், பூரித்துப் போகும்  அவர்களின் பெற்றோர்களை எந்த வகையில் சேர்ப்பது ?”