இந்தியா சுதந்திரம் பெறும் வரையில் இங்கு இந்திய தேசியம் என்ற கருத்தியலே வலுப்பெற்றிருந்தது. பிறகு திராவிட தேசியம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது.
அதன் பிறகு, தமிழ்த்தேசியம் காலூன்ற ஆரம்பித்தது. ஆனால் தமிழ்த்தேசியம் பேசியவர்களும், திராவிடம் என்பதை எதிரியாக நினைக்கவில்லை.
திராவிட தேசியம் பேசிய கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் தமிழகத்தின், தமிழரின் நலனை முன்னிறுத்தியே பேசின.
ஆனால், “நாம் தமிழர்” கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், “திராவிட தேசியம் என்பதே மாயை. அது குறித்து பேசுபவர்கள், தமிழர்களுக்கு, தமிழுக்கு எதிரானவர்கள்” என தீவிரமாக பேச ஆரம்பித்தார்.
ஆனால், அவர் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் பிரபாகரன், திராவிடர், தமிழர் என்கிற இரு பதங்களும் தமிழர்களைக் குறிப்பவையே என்கிற கொள்கையோடுதான் இருந்தார்.
ஈழத் தமிழ் தேசியவாதிகளும், திராவிடர் என்ற சொல்லை தமிழர்கள் என்ற அர்த்ததுடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.
1978 ம் ஆண்டு, கியூபாவில் நடைபெற்ற சர்வதேச மாணவர் இளைஞர் மாநாட்டிற்கு புலிகள் அனுப்பிய அறிக்கையில் தமிழர்களை திராவிடர்கள் என்று குறிப்பிட்டனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுதான் “நாம் தமிழர் கட்சி” எனக்கூறும் சீமானும் அவரது கட்சியினரும் இதை அறிந்துகொள்ள வேண்டும்.
(தகவல் நன்றி: தாரமங்கலம் கலையரசன்)