சென்னை,

டுத்த மாதம் 21ந்தேதி தனது முதல் கட்ட அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நடிகர் கமல ஹாசன், அந்த சுற்றுப்பயணத்திற்கு நாளை நமமே என்று பெயர் சூட்டியுள்ள நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை என்றால், தமிழ்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்பதும் அவரது கடமை என்று கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், தனது சுற்றுப்பயணத்திற்கு ஒரு பெயர் வேண்டும் என்றபோது தனக்கு முதலில் நினைவுக்கு வந்தது நாளை நமதே என்பதுதான் என்றார்.

நாளை நமதே என்பது எம்.ஜி.ஆர் படத்தின் பெயராக இருந்தாலும், நாளை நமதே என்கிற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு இருந்ததாகவும், அதே எண்ணம் தமக்கும் இருப்பதாகவும் கமல் கூறினார்.

மேலும், பேருந்து கட்ட உயர்வு குறித்த கேள்விக்கு,  தனியார் பேருந்துகள் அதிகம் ஓட வேண்டும் என நினைப்ப வர்கள் தான் பேருந்துக் கட்டணம் உயரவேண்டும் என நினைப்பார்கள் என்றார். நாங்கள்  மக்களுக்கு துணையாக இருப்போம், எது வந்தாலும் எதிர்ப்போம் என்றார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில்  ஜெயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர்,  தமிழ்த்தாய் வாழ்த்தை  கண்ட இடத்தில் பாடக்கூடாது என்றும், கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதால்தான் இது போன்ற சர்ச்சை ஏற்படுகிறது  ஜெயேந்திரர் தியானத்தில் இருந்த தாக கூறப்படுவதை ஏற்க முடியாது என்றார். சில பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது, செய்து தான் காட்ட முடியும் என்ற கமல்,

தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்பதும் கடமையே என்று கூறினார்.

மேலும்,  தமிழகத்தை மேம்படுத்துவதே தமது முதல் நோக்கம் என்றும், ஒருகிராமத்தை தேர்வு செய்து, முன்மாதிரி கிராமமாக மாற்றுவதே தமது திட்டம் என்ற கமல்,  தமது நோக்கமும் , ரஜினியின் நோக்கமும் தமிழக மக்களை மேம்படுத்துவது தான் என்றும் கூறினார்.