DMK Abdul Waqab sacked
சென்னை:
சட்டமன்ற உறுப்பினராக உள்ள அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சியில் பணிகளை மேற்கொள்ள இடையூறு செய்து வருவதாக புகார்கள் வெளியாகியிருந்த நிலையில், அவர் திமுக மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் மைதீன்கான் நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியன், மாநகராட்சி கவுன்சிலரை மிரட்டியதாக சில வாரங்களுக்கு முன்பாக புகார் எழுந்த நிலையில் அவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாநகராட்சி மேயர் மாற்றம், பணிகளில் இடையூறு என உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான பிரச்னைகளை எழுப்பிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel