சலீம், அமித்
சலீம், அமித்

ட்டுமொத்த தேசத்துக்காக உழைத்த தலைவர்களை, சாதி வட்டத்தில் சுருக்கி அவப்பெயருக்கு ஆளாக்கும் கும்பல் ஒருபக்கம்…  சொந்த வாரிசுகளே தலைவர்களை அவமானப்படுத்தும் சோகம் மறுபக்கம்!

இன்று வெளியான செய்தி:  “மறைந்த முன்னாள் குடியரசு தலைவர்  அப்துல் கலாம் அவர்களின் சகோதரர் பேரன் ஷேக் சலீம் பா.ஜ.க.வில் இருந்து விலகினார்!”

கடந்த செப்டம்பர் மாதம்தான் பி.ஜே. பி கட்சித் தலைவர் அமீத் ஷா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார் இந்த சலீம்.

இப்போது  விலகிவிட்டார்.   “ அப்துல் கலாம் வாழ்ந்த டெல்லி வீட்டை ஒரு நினைவில்லமாக மாற்ற வேண்டுமென்ற தங்கள் குடும்பத்தினரின் வெண்டு கோளை அரசு ஏற்காததனால் வருத்தமுற்று இம்முடிவை எடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

அதே போல காமராஜரின் வாரிசு (பேத்தி) என தன்னை பிரபலப்படுத்திக்கொண்ட மயூரி என்பவரும் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து சமீபத்திலேயே விலகினார்.

மயூரி
மயூரி

”எதிர்பார்த்த அளவுக்கு பா.ஜ.,வில் செயல்பட முடியாத நிலையில், அக்கட்சியில் இருந்து விலகுகிறேன்,” என, முன்னாள் முதல்வர் காமராஜரின் பேத்தி மயூரி தெரிவித்தார்.

அப்துல்கலாம், குடியரசு தலைவர் பதவியை விட்டு விலகிய பிறகு, பாஜகவில் சேர்ந்தாரா… தனியாகத்தான் அமைப்பு நடத்தி வந்தார். பிறகு ஏன் அவர் பெயரைச் சொல்லி.. அவரது வாரிசு என்று விளமபரம் செய்துகொண்டு.. இந்த சலீம், பாஜகவில் சேர வேண்டும்.

இவரை விடக்கொடுமை, மயூரி விசயம். டில்லியில் காமராஜரை கொல்ல முயன்றது இந்ததுத்துவ கும்பல். மத அரசியலை கடுமையாக எதிர்த்தவர் காமராஜர். அவரது  வாரிசு என்று சொல்லிக்கொண்டு இவர் பாஜகவில் சேர்ந்தது என்ன நியாயம்?

இது போன்று பலரும் “அந்த தலைவரின் வாரிசு, இந்த தலைவரின் வாரிசு” என்று கிளம்பியிருக்கிறார்கள்.  இவர்களை கூர்ந்து கவனித்தால் ஒரு விசயம் புலப்படும். இவர்கள் யாரும் தலைவர்களின் நேரடி வாரிசாக இருக்க மாட்டார்கள்.   மேலும் அந்த தலைவர் உயிரோடு இருக்கும் வரை இவர்கள் வெளி உலகுக்கு அறிமுகமே ஆகியிருக்க மாட்டார்கள்.

தவிர, அந்த தலைவரின் நேர் எதிர் கொள்கையோடு செயல்படுகிறார்கள்.  பிறகு  எதற்காக தலைவரின் வாரிசு என்று அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்?

திறமையும், உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் தங்கள் பெயரைவைத்து அரசியலில் முக்கிய இடத்தை அடையளாமே..!

இனியாவது எவரும் பொதுவான, தலைவர்களின் வாரிசு என்று சொல்லி அவரது மரியாதையை குறைக்காமல் இருக்க வேண்டும்!