டில்லி
தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவால் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த டிசம்பருடன் கொரோனா முதல் அலை பரவல் முடிவடைந்ததால் அதன் பிறகு தினசரி பாதிப்பு குறைந்தது. இதையொட்டி நாடெங்கும்ம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டன. ஆனால் கடந்த பிப்ரரி மாத மத்தியில் இருந்து கொரோனா இரண்டாம் அலை பாதிப்பாள் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த இரண்டாம் அலை பாதிப்பு முதல் அலையை விட அதிக அளவில் இருந்தது. ஆகவே பாதிப்பு மற்றும் மரன எண்ணிக்க்சை மிகவும் அதிகரித்தது. குறிப்பாக கடந்த மே மாத முதல் வாரம் தினசரி 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் அதிகமானது எனவே நாடெங்கும் ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக்கப்பட்டன.
இதையொட்டி சிறிது சிறிதாகத் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. ஜூலை மாதத்தில் இருந்தே தினசரி பாதிப்பு சுமார் 40000 ஆக இருந்து வருகிறது. ஆகவே மக்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் தினசரி பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இது கொரோனா மூன்றாம் அலை தொடக்கமாக இருக்குமோ என்னும் அச்சம் மகக்ளிடையே நிலவியது.
நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ” கொரோனா பரவல் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா ஆகிய 10 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகத் தொற்று பாதிப்பு இருக்கிறது.அத்துடன் 53 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 5 முதல் 10 சதவீதத்துக்குள் இருக்கிறது.
இந்த பரவல் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய விஷயமாகும். எனவே இந்த மாவட்டங்களில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறிதளவு அலட்சியம் காட்டினால் கூட, நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.