சென்னை’

மிழக அமைச்சர் அன்பில் மகேஷ் 1598 நூலகங்களுக்கு வைபை வசதி அளிக்கப்பட்டுள்ளதகா தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் பா.ம.க. உறுப்பினர் அருள் (சேலம் மேற்கு), நூலகங்கள், போட்டி தேர்வுகள், சேலத்தில் அறிவு சார் மையம் எழுத்தாளர்களின் புத்தகங்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது பதிலில்,

”சேலம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 35 நூலகங்கள் முழுமையாக கட்டப்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்கள்தான் போட்டித்தேர்வுகளுக்கு தேவையான, பொருத்தமான புத்தகம். கிட்டத்தட்ட 1,958 நூலகங்களுக்கு இதுவரை ‘வைபை’ வசதி செய்யப்பட்டு உள்ளது. 108 நூலகங்களுக்கு தரமான வசதி செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைன் சம்பந்தமான வாசிப்பை மாநில அரசு கொண்டு வந்திருக்கிறது. கொள்முதலுக்காக 11 ஆயிரம் புத்தகங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் கிட்டத்தட்ட 8,363 புத்தகங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. டிசம்பர் மாதத்திற்குள்ளாக அவை முழுமையாக கொள்முதல் செய்யப்படும்.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி போன்ற புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற மாவட்ட மைய நுலகங்களுக்கு தலா 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது”

என அறிவித்துள்ளார்.