மதுரை: தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மதுரை பாராளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை செய்துள்ளார். தமிழகஅரசே விரைந்து நடவடிக்கை எடு என வலியுறுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி போன்ற மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்பலிகளும் அதிகரித்து வருகின்றன. தொற்று அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான நோயாளிகள் உயரிந்து வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழகத்தில் இதுவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில்,  ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி.  எச்சரிக்கை செய்துள்ளது.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன்.

ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயண்பாட்டிற்கான ஆக்சிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக நமது பயன்பாடு 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது

தமிழக அரசே,விரைந்து நடவடிக்கைகளில் இறங்கு 

என கூறியுள்ளார்.