vel
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரு கட்சிகளும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திடிரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அதிர்ச்சி அளித்தார்.
ஆனாலும், இரு கட்சிகளும் மீண்டும் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளன. இதற்காக இன்று சந்தித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, த.மா.காவுக்கு 15 இடமும், த.வா.கவுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]