பீப் பாடலை பாடிய சிம்பு இசையமைத்ததாக அனிருத் என இருவருக்குமே கண்டனங்கள் குவிந்தன. காவல்துறையிலும் இருவர் மீதும் புகார்கள் கொடுக்கப்பட்டன.
இதற்கிடையே, “அந்த பாடலுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லே..” என்று அனிருத் அறிக்கைவிட… அடுத்ததாக சிம்புவும், “அனிருத்துக்கு இதில் தொடர்பில்லை” என்று ஸ்டேட்மெண்ட் விட்டார்.
இதற்கிடையே, அனிருத் இசை அமைத்த “தங்கமகன்” படம் ரிலீஸ் ஆனது. “இந்தப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும், ஓட விடமாட்டோம்” என்றெல்லாம் சில அமைப்புகள் முண்டா தட்டின. ஆனால் எந்த பிரச்சினையும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்ல… “சர்ச்சையில் சிக்கியதால் அனிருத் ஒப்பந்தமான “சிங்கம் 2” உட்பட மூன்று படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக வந்த வந்த செய்தியும் தவறு என்பது இப்போது வெளியாகி இருக்கிறது. இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற அனிருத் கைதுக்கு பயந்து அங்கேயே தங்கிவிட்டார். இதனால் காத்திருக்க முடியாத நிலையில் சில படங்களில் வேறு இசையமைப்பாளரை புக் செய்திருக்கிறார்கள். மற்றபடி, அனிருத் இசைக்காக சில படங்கள் காத்திருக்கவும் செய்கின்றன. தனது இசையமைப்பு வேலைகளை அங்கிருந்தபடியே ஆரம்பித்துவிட்டார் அனிருத்.
அதோடு, வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்திற்கு மலேசியாவில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தப்போகிறார் அனிருத். இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், “பீப்பாடலில் அனிருத்துக்கு தொடர்பில்லை” என்று சிம்புவே சொல்லிவிட்டதால் சட்ட பிரச்சினைகளையும் எளிதாக கடந்துவிடுவார்.
ஆனால், சிம்புதான் வசமாக சிக்கிக்கொண்டார். நடிகர் சங்கமே கண்டித்தது ஒருபக்கம்… காவல்துறைக்கு பயந்து தலைமறைவாக கிடப்பது மறுபக்கம் என்று சிக்கலில் இருக்கிறார்.
தவிர ஏற்கெனவே கால்ஷீட் சொதப்பல் காரணமாக அவரை அலர்ஜியாக நினைப்பவர்கள் பலர். அவரை நடிக் அழைக்கும் சிலரும் கூட இனி அவரை நெருங்கவே மாட்டார்கள் என்கிறது திரையுலக வட்டாரம்.
ஆக, அனிருத் எஸ்கேப் ஆகிட்டார்.. சிம்பு சிக்கிட்டார்!