12573078_820707364717829_7345435217890540213_n
சென்னை:  உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.
மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலைியல், பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிகட்டு நடத்த தடை வாங்கியது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் பல பகுதிகளில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அந்தந்த பகுதி காவல்துறையினர், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். சில இடங்களில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
ஆனாலும் பரவலாக பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர், – சிவகங்கை மாவட்டம்  கோவிலூர், மற்றும் சிங்கம்புணரி, – திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் ,புதூர் ,திருச்சி மாவட்டம் – திருச்சி இலால்குடி மற்றும் ,வயலூர் , மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சூரக்குடி, – வேலூர் மாவட்டம்  கணியம்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நாகப்பட்டினம் மாவட்டம் தண்ணிலாபாடி  ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது.