மும்பை

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 57.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 96,751 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 54.60 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 2.16 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக மாநிலம் எங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.   மும்பை நகரில் பாதிப்பு 7 லட்சத்துக்கும் மேல் உள்ளதால் இங்கு அதிக அளவில் தடுப்பூசி  போடும் பணிகள் நடந்து வருகிறது.   மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது

இந்நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”மும்பை மாநகராட்சி மற்றும் அரசு நடத்தும் தடுப்பூசி மையங்கள் ஜூன் 3 அன்று மூடப்பட்டிருக்கும்.   இதனால் ஏற்படும் அசவுகரியத்துக்கு மன்னிக்க வேண்டுகிறோம். “ என மும்பை மக்களுக்குத் தெரிவித்துள்ளது.