1
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு குடும்பத்துக்கு சொந்த மான ‘கிங் கெமிக்கல்ஸ்’ ரசாயன தொழிற்சாலை தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் வடசேரி கிராமத்தில் அமைக்கப்பட்டது.  பின்னர், பூட்டப்பட்ட இந்த ஆலையில், அயல் நாட்டு மது வகைகள் தயா ரிப்புக்கான எரிசாராய வடிப்பு ஆலை தொடங்க முடிவுசெய்தது டி.ஆர்.பாலு குடும்பம்.  அதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த  9.4.2010 அன்று கிங் கெமிக்கல்ஸ் வளாகத்துக்குள் நடத்தப்பட்டது.
‘இந்த ஆலை அமைக்கப்பட் டால், ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் இன்னும் கீழே இறங்கிவிடும். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். ரசாயன கழிவு வெளியேறும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு,  மக்களின் உடல் நலமும் பாதிக்கப்படும்’ என்று  கிராம மக்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும்,, கருத்துக்கேட்பு கூட்டத்தை ஊர் பொது இடத்தில் நடத்த வலியுறுத்தி, ஆலை முன்பு  போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட, காவல்துறையினர் மற்றும்  ஆலை நிர்வாகம் அமர்த்திய ஆட்களால் பொதுமக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இதில் பலர் காய மடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நாளை கருப்பு நாளாக ஆண்டுதோறும் வடசேரி கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, கடந்த 9ம் தேதியும் கிராமத்தில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
ஊராட்சித் தலைவர் எஸ்.கே.கண்ணதாசன் தலைமை யில், ஊடகவியலாளர் அய்யநாதன், திரைப்பட இயக்குநர் தமிழ்மணி, வழக்கறிஞர் மணிகண்டன் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வடக்குத் தெருவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கு, ஆலை நிர்வாகத்தை எதிர்த்து கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
அந்த எரிசாராய ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி,கிராமமக்கள்  தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக தகவல் பரவியிருக்கிறது.
மேலும், “முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தனது கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவாரா” என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.