சென்னை

டாஸ்மாக் கடைகளைச் சுதந்திர தினத்தன்று மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்குக் கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது.  ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15  சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் நாடெங்கும் வரும் 15-ம் தேதி 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டாஸ்மாக் நிர்வாகம் சுதந்திர தினத்தன்று மாநிலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடையைத் திறந்து வைக்கும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.