jayalalitha

தூத்துக்குடி:

முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஜெயலலிதா ஆட்சி என்றாலே பல தரப்பினர் மீதும் அவதூறு வழக்கு தொடரப்படுவது வழக்கம். தனது அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள், பேச்சாளர்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மீது தொடர்ந்து அவதூறு வழக்குகள் தொடர்வது ஜெயலலிதாவின் வழக்கங்களில் ஒன்று.

கருணாநிதி விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற பல அரசியல் பிரமுகர்கள் மீதும், ஜூனியர் விகடன் நக்கீரன், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியாடுடே முரசொலி, இந்து ஆகிய பத்திர்கைகள் மீதும் அவதூறு வழக்குகள் தொடர்ந்தது ஜெயலலிதா தலைமையிலான தற்போதைய அ.தி.மு.க. அரசு.

“கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 150 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்ததன் மூலம் புதிய சாதனை நிகழ்த்த்தியிருக்கிறது இந்த அரசு” என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் சமீபத்தில் கிண்டலாக தெரிவித்திருந்தார்.

இப்படிப்பட்ட ஜெயலலிதா மீது, அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதரணி.

விஜயதரணி
விஜயதரணி

தூத்துக்குடியில் நடைபெற்று வரும், காங்கிரஸ் கட்சியின் 2வது மாநாட்டில் இதை தெரிவித்தார்.

இந்த விழாவில் பேசிய விஜயதாரணி, “கடந்த 9-ம் தேதி அதிமுக நாளிதழில் ‘சாட்டை’ என்ற பெயரில் என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே . என் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன்.” என்ற விஜதரணி, “ஜெயலலிதா மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டேன்” என்றும் ஆவேசத்துடன் கூறினார்.

அவதூறு வழக்குகளுக்கு புகழ் பெற்ற ஜெயலலிதா மீதே அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.