Amazon-Logo-schwarz

 

 

 

 

அமேசான்-ஆன்லைன்-மோசடி

அமேசான் என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனம் தமிழக நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம் ஒன்றை கொடுத்தது. அதில் அமேசான் இணைய தளம் மூலமாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்ளுக்கு தினம் தோறும் 1 கிலோ தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்தது.

அதே நேரத்தில் அமேசான் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.amazon.in – ல் இந்த வாய்ப்பு தமிழகத்தில் வாழ்பவர்களுக்கு கிடையாது என்று தெரிவித்திருந்தது.

“தமிழகத்தில் செய்தித் தாள்களில் வெளியிட்ட விளம்பரங்களில் இந்த நிபந்தனையை திட்டமிட்டே அமேசான் நிறுவனம் மறைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துவிட்டு பிறகு ஏன், தமிழக ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்?

தங்கம் வெல்லலாம் என்ற ஆசையை தமிழக மக்களிடத்தில் தூண்டிவிட்டு தங்களது இணையதளத்தின் மூலமாக பொருட்களை வாங்க வைத்து கடைசியாக உங்களுக்கு தங்கம் இல்லை என்று ஏமாற்றுவது என்கிற மோசடி வைலை” என்று இதற்கு கடுமையான எதிர்ப்பை கோவை ராமகிருட்டிணன், வேல்முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.

கடந்த 17ம் தேதியுடன் அமேசானின் அந்த (ஏமாற்றுத்) திட்டம் முடிவடைந்தது. ஆனால் தொடர்ந்து வேறு விதங்களில் ஏமாற்ற ஆரம்பித்திருக்கிறது.

குறைந்த விலையில் செல்போன் விற்பனைக்கு இருப்பதாக கூறும் அந்த தளம், இதற்கான ஆர்டரை செல்போன் மூலமாக பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

“விற்பனை என்ற பிறகு கணினி மூலம் ஆர்டர் செய்தால் என்ன, செல்போன் மூலமாக ஆர்டர் செய்தால் என்ன..இதிலும் மோசடி செய்கிறது அமேசான் நிறுவனம்” என்று எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்த நிலையில் தங்க பரிசு என்று மோசடி செய்த அமேசான் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவும் சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அமேசான் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கம். இதுதான்:

https://www.facebook.com/AmazonIN

மேலும் தள்ளுபடி என்ற பெயரில் இருக்கும் பேஸ்புக் பக்கத்திலும் அமேசான் விளம்பரங்கள் தொடர்ந்து வருகின்றன.

தீபாவளி நெருங்கும் நேரத்தில், பலரும் போனஸ் வாங்குவார்கள் என்பதால், திட்டமிட்டு ஏமாற்ற இந்த முயற்சி நடப்பதாக தெரிகிறது.

வாசகர்கள் ஏமாந்துவிடாதீர்கள்.

தள்ளுபடி பேஸ்புக் பக்கத்தின் லிங்க்:

https://www.facebook.com/thallubadi?fref=ts