
தமிழக மின் திட்டங்கள் குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக மத்திய மின்துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து முதல்வர்தான் விளக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். “தமிழக முதலமைச்சரை சந்திக்க முடியாத நிலை இருப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறிய குற்றச்சாட்டில் சிறிதும் உண்மை இல்லை. இது அரசியல் ஆதாயத்துக்காக வெளியிடப்படட ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டை கூறியது கண்டிக்கத்தக்கது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு போன்றவர்கள் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர். இந்த விஷயத்தில் பொன். ராதாகிருஷ்ணன், பியூஷ் கோயல் ஆகியோர் விஷம பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று அந்த விளக்கத்தில் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel