Chembarambakkam-lake
கடந்த கனமழையில் நேமம் ஏரி உடைப்பு தொடர்பாக சென்னையை சேர்ந்த துரை ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடிநீருக்காக நேமம் ஏரியை ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்த அரசு திட்டமிட்டதை தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அளவிற்கு அதிகமாக ஏரியிலிருந்து சவ்வுடு மணல் எடுத்ததால் அதன் கொள்ளளவு அதிகமானதாகவும், கரைகள் பலவீனமாக இருந்ததாலேயே மழையின் போது உடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளதால் வழக்கிலிருந்து அவரை விடுவித்து, அவர் கூறிய கருத்து ஏற்க கூடியது என்பதால் இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துக் கொண்டதாக கருதி செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு வழக்குடன் சேர்த்தது. இது தொடர்பாகவும் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.