சென்னை
இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் தினமும் தங்கள் விலைகளை மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதை ஒட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை சில மாதங்களுக்கு முன்பு தினமும் உயர்ந்து வரலாற்றில் உச்சத்தை தொட்டது. இதனால் மக்கள் கடும் துயருற்றனர்.
அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது. இது மக்களுக்கு சற்றே ஆறுதலை அளித்தது. ஆனால் இந்த ஆறுதல் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கி உள்ளது.
இன்று சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 52 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.63 காசுகளும் உயர்ந்துள்ளன. இன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.39 எனவும், ஒரு லிட்டர் டிசல் ரூ.67.25 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.