திருவண்ணாமலை: சென்னை கடற்கரை – வேலூர்  மெமு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை திருவண்ணாமலையில் இருந்த சென்னை புறப்பட்டது. முன்னதாக நேற்று (மே 2-ஆம் தேதி மாலை,  சென்னை கடற்கடையில் இருந்து திருவண்ணாமலை புறப்பட்டு சென்றது. இந்த ரயில் சேவைக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்பட்டு வந்த மெமு  மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் பயணிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதை ஏற்று,  தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்தபடி திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்தது. அதன்படி, மே2ந்தேதி மாலை  இந்த சேவை தொடங்கியது.

இன்று (மே 3ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு  திருவண்ணாமலையில் புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த மின்சார ரயில், போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேடராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு 5.40 மணியளவில் வந்து சேர்ந்தது. பின்னர், து. வேலூரில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வழக்கம்போல் காலை 9.50 மணிக்கு வந்து சேர்கிறது..

 “தினமும் மாலை 6 மணிக்கு  சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை சென்று அங்கிருந்து பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் என திருவண்ணாமலை வரை இரவு 12.05க்கு சென்று சேரும் வகையில் இயக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.