jammu-assembly

 

ட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்பார்கள். இப்போதுதான் பரிவார ராஜ்யத்தில் மாட்டைக் கடிக்கக்கூடாதே. நேரடியாகவே மனிதர்களைக் கடிக்கின்றனர், அடிக்கின்றனர், கொல்லுகின்றனர்.

இவர்கள் மதவெறி எந்த அளவுக்கு சென்றிருக்கிறதென்றால், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அவர் அளித்த விருந்தில் மாட்டிறைச்சி பரிமாறினார் என்பதற்காக, சட்டமன்றத்திலேயே தாக்கப்பட்டிருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் விடுதி வளாகத்தில் நேற்று சுயேச்சை உறுப்பினர் என்ஜினீயர் ரஷீத் அளித்த அவ்விருந்தில் பீஃப் கபாப், பட்டி, உருண்டைகள் என பல வகை உணவுகள் பரிமாறப்பட்டிருக்கின்றன.

அதற்கு பதிலடியாக இன்று பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலேயே ரஷீதைத் தாக்கினர். அம்மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாரதீய ஜனதாவும் இணைந்து கூட்டணி அரசு அமைத்திருக்கின்றன. இத்தனைக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சி சற்று தீவிரவாதம் பேசும் கட்சி, காஷ்மீர் உரிமைகள் குறித்து அவ்வப்போது முழங்கும். ஆனால் கூட்டணி அரசு வேண்டும், மத்தியில் ஆள்வதோ பாஜக எனவே வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கிறது.

அங்கு நடக்கும் இராணுவதர்பாரில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் மௌனம் காக்கிறது அல்லது அடக்கி வாசிக்கிறது.

மாட்டிறைச்சி தொடர்பில் ஒரு முஸ்லீம் உறுப்பினர் தாக்கப்பட்ட பிறகும் முதல்வர் முஃப்டி முஹம்மது சயீத், ”இப்படியெல்லாம் செய்யக்கூடாது. கண்டிக்கிறேன். பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும்.” எனக் கூற, துணை முதல்வரோ அடித்திருக்கவேண்டாம்தான், ஆனால் ரஷீதும் எதற்காக விருந்தில் மாட்டிறைச்சி பரிமாறி, இந்துக்கள் மனங்களைப் புண்படுத்தியிருக்கவேண்டும் என்றிருக்கிறார்.

1989ஆம் ஆண்டு இதே முஃப்டியார் விபி சிங் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மகள் ருபியா சயீத் தீவிரவாதிகளால் கடத்தப்பட, ஐந்து பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். காஷ்மீரில் தீவிரவாதிகளின் கை ஓங்கியதில் ஒரு முக்கிய கட்டம் அது, மகளுக்காக நாட்டு நலனைத் தியாகம் செய்த புண்ணியவான், இப்போது பதவிக்காக சமூக உணர்வுகளைத் தியாகம் செய்கிறார்.

இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவெனில் அம்மாநில உயர்நீதிமன்றம் மாட்டிறைச்சி விற்பனை தடைசெய்யப்படவேண்டும் என உத்திரவிட, உச்சநீதிமன்றம் அத்தடைக்குத் தடை விதித்திருக்கிறது இரண்டு மாதங்களுக்கு. வழக்கு இன்னமும் அதன் முன்னரே இருக்கிறது.

இப்பின்னணியில்தான் ரஷீத் விருந்து கொடுக்கிறார். பாஜகவினர் சட்டமன்றத்தில் அவரைத் க்குகின்றனர். முதல்வர் வழிகிறார்.

அவனவன் சோற்றுக்கு வழியின்றி செத்துக்கொண்டிருக்கிறான். இவர்களோ கோ மாதாவிற்காக அடிக்கிறார்கள் கொல்லுகின்றனர்.

பதிலுக்கு பாஜக பலவீனமாக இருக்கும் பகுதிகளில் ஏதாவது காரணம் சொல்லி அவர்கள் தாக்கப்பட்டால், அல்லது இந்துக்கள் தாக்கப்பட்டால்?

எங்கே போகிறது நாடு? இதுதான் மோடி சொன்ன அச்சே தின், நல்ல நாளா?

 

–  த.நா.கோபாலன்